பள்ளிகளில் இனி பிளாஸ்டிக் பயன்படுத்த முடியாது – அமலுக்கு வந்தது தடை உத்தரவு

தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் (செப். 15) பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல், பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இந்தநிலையில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் (செப். 15) பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்திக் கொள்ள பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், தமிழக பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், அனைத்துப் பள்ளிகளிலும், பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக உள்ள பொருள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் (செப். 15) இந்த தடை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பள்ளி வளாகம் என்ற பெயர் பலகை வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version