பலாலி விமான நிலைய விரிவாக்க பணி இந்தியாவுக்கு கிடையாது-இலங்கை அமைச்சர்

பலாலி விமான நிலையத்தை விரிவுபடுத்தும் பணியை எந்த ஒரு வெளிநாட்டுக்கும் வழங்கப்போவதில்லை என இலங்கை அறிவித்துள்ளது.

இலங்கையின் பலாலி விமான நிலையத்தை, பிராந்திய விமான நிலையமாக மேம்படுத்த , இந்தியா உதவும் என செய்திகள் வெளியாகி இருந்தன. இது தொடர்பாக இலங்கை மற்றும் இந்தியாவுக்கும் இடையில் உடன்பாடு ஒன்று அண்மையில் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படது.

இந்த நிலையில் இந்த பணிகளை எந்தவொரு வெளிநாட்டிற்கும் வழங்கப்போவதில்லை என, அந்த நாட்டின் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள ஆறு உள்ளூர்விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பாக நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பலாலி விமான நிலையப் புனரமைப்பு பணி தொடர்பாக , இந்திய நிறுவனங்கள் திட்டங்களை தயாரித்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அமைச்சரின் அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

Exit mobile version