நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிபெறும் – அமைச்சர் கே.சி.கருப்பணன்!

அதிமுக தொண்டர்கள் கழகத்தின் ஆணிவேர், அவர்களை யாராலும் அசைக்க முடியாது என்று, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி கருப்பணன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கட்சி மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் புதிய வாக்காளர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைத்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் கே.சி கருப்பணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதிமுக அழிந்து விடும் என்ற திமுகவின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று அவர் தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆற்றலால் வலிமை வாய்ந்த கட்சியாக திகழும் அதிமுக, நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று வரலாறு படைக்கும் என்று அவர் கூறினார்.

கட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதிமுக தொண்டர்கள் அயராது உழைத்து வருவதாக அமைச்சர் கருப்பணன் குறிப்பிட்டார்.

Exit mobile version