நாகர்கோயிலில் 14வது தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி

நாகர்கோயிலில் நடைபெற்று வரும் 14வது தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் 380க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். குமரி மாவட்டம் நாகர்கோயிலில் 14வது தேசிய கராத்தே சாம்பியன் ஷிப் போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 380க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர்.

2 நாட்கள் நடைபெறும் போட்டிகளில், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என்ற பிரிவுகளில் வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் அடுத்த மாதம் இலங்கையில் நடைபெற உள்ள ஆசிய அளவிலான கராத்தே சாம்பியன்சிப் போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version