நம்பிக்கையில்லா தீர்மானம் – வாக்கெடுப்பு

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததைக் கண்டித்து மத்திய பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது  மக்களவையில் இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மல்லிகார்ஜூனகார்கே ஆகியோர் முதலில் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னர், விவாதத்தில் பங்கேற்று பேசுவதற்கு கட்சிகள் வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  காங்கிரஸ் கட்சிக்கு 38 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது பெரிய கட்சியான அ.தி.மு.க.வுக்கு 29 நிமிடங்களும், திரிணாமுல் காங்கிரசுக்கு 27 நிமிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ள தெலுங்கு தேசம் கட்சிக்கு 13 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. விவாதத்தில் பேச பாஜகவுக்கு 3 மணி 33 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 மணி 35 நிமிடங்கள் வரை தீர்மானம் மீது விவாதம் நடத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version