தொழில் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் தமிழகம் முன்னிலை – தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்

கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்ல இருப்பதாக கூறினார். அதனை கொச்சைப்படுத்தும் விதமாக அமைச்சர்கள் சுற்றுலா செல்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருவதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார். தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் தமிழகம் தொடர்ந்து முன்னிலையில் உள்ளதாக அமைச்சர் சம்பத் கூறினார்.

Exit mobile version