தொப்பலாக்கரையில் கலவரத்தில் ஈடுபட்ட 31பேர் கைது

 

விருதுநகர் மாவட்டத்தில் கலவரத்தில் ஈடுபட்டதாக 31 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

விருதுநகர் மாவட்டம் தொப்பலாக்கரை கிராமத்தில் உள்ள ஒரு கோயிலில் சாமி கும்பிடுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்சினை இருந்து வந்தது.ஒரு தரப்பினர் பொங்கல் வைக்க முயன்ற போது மோதல் ஏற்பட்டது. வாகனங்கள் மற்றும் வைக்கோல் படைப்பைகள் தீக்கிரையாக்கப்பட்டன. மோதல் மற்றும் வன்முறை தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version