தொடர் மழை காரணமாக தருமபுரி சந்தையில் பூக்களின் விலை வீழ்ச்சி

தொடர் மழை காரணமாக தருமபுரி சந்தையில் பூக்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக தருமபுரி பூச்சந்தையில் பூக்களின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தொப்பூர், பெரும்பாலை, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் பூ சாகுபடி செய்துள்ளனர். இங்கு சாகுபடி செய்யப்படும் பூக்கள் அனைத்தும் தருமபுரி பேருந்து நிலையம் அருகே உள்ள பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படுகிறன.

விசேஷ நாட்கள் இல்லாததாலும், தொடர் கனமழை காரணமாகவும் பூக்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட சாமந்தி பூ 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கிலோ 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட ரோஜா, 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோன்று, கோழிக்கொண்டை உள்ளிட்ட பூக்களின் விலையும் சரிவடைந்துள்ளதால் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Exit mobile version