தெப்பக்குளத்தைத் தூர்வாரிய அமைச்சர் – பொதுமக்கள் பாராட்டு!

சிவகங்கையில் கதர் மற்றும் கிராம தொழிற்துறை அமைச்சர் பாஸ்கரன் தெப்பக்குளத்தைத் தூர்வாரியது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

சிவகங்கையில் 300 ஆண்டுகள் பழமையான 6 ஏக்கர் பரப்பளவில் தெப்பக்குளம் அமைந்துள்ளது. இந்த தெப்பக்குளத்தின் தண்ணீர் உள்ள காலங்களில் நகர் முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து அனைவரது தண்ணீர் தேவையும் பூர்த்தி செய்து வந்தது.

கடந்த பல ஆண்டுகளாகத் தூர்வாரப்படாமலும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமலும் இருந்து வந்த இந்தத் தெப்பக்குளத்தை தூர்வார முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் இன்று திடீர் என்று தெப்பக்குளம் வரத்துக்கால்வாய் பணிகள் ஆய்வினை கதர் மற்றும் கிராம தொழிற்துறை அமைச்சர் பாஸ்கரன் மேற்கொண்டார். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் அமைச்சரே மண்வெட்டியை எடுத்து துப்புரவு பணியினை மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அதிகாரிகளும் துப்புரவு பணிகளை மேற்கொண்டனர். அமைச்சரின் இந்த திடீர் ஆய்வு மற்றும் களத்தில் இறங்கி பணிகளை மேற்கொண்டது அனைவராலும் பாராட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனைகளை வழங்கினார்.

Exit mobile version