தூத்துக்குடியில் மினி மாரத்தான் போட்டி!

தூத்துக்குடியில் காமராஜ் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடியில் காமராஜ் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டி தூத்துக்குடி பீச் ரோட்டில் துவங்கி, காமராஜ் கல்லூரியில் முடிவடைந்தது.

இதில் ஆண்கள், பெண்கள் பிரிவில் முதலிடம் வென்றவர்களுக்கு 2 கிராம் தங்க நாணயமும், 2- ம் இடத்தை வென்றவர்களுக்கு 1 கிராம் தங்க நாணயமும், 3- ம் இடம் வென்றவர்களுக்கு அரை கிராம் தங்க நாணயம் வீதம் பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும், மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Exit mobile version