திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் மீண்டும் அனுமதி…

வயது மூப்பின் காரணமாக திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக, காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோபாலபுரம் வீட்டில் வைத்து அவருக்கு 4 மருத்துவர்கள்  சிகிச்சை அளித்து வந்தநிலையில், நள்ளிரவில் கருணாநிதிக்கு இரத்த அழுத்த குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து, அதிகாலை 1.30 மணிக்கு காவேரி மருத்துவமனையில் கருணாநிதி மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அங்கு, தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சை காரணமாக தற்போது கருணாநிதியின் ரத்தம் அழுத்தம் சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அவர் இருப்பதாகவும், மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்ள மருத்துவமனை முன்பாக தொண்டர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். இதனிடையே, கருணாநிதியை பார்க்க முக்கிய தலைவர்கள் வரக்கூடும் என்பதால், காவேரி மருத்துவமனையை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version