திமுகவின் முக்கிய தீர்மானங்கள்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காவிமயமாக்கும் மத்திய பாஜகவின் எண்ணங்களை வீழ்த்துவோம், வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் கவனமுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேரறிவாளன் உள்பட 7 பேரை தாமதிக்காமல் விடுதலை செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆதரவு தரப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Exit mobile version