தமிழ் ராக்கர்ஸிலும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா – படக்குழுவினர் அதிர்ச்சி

சர்காரின் படத்தின் இசை வெளியீட்டு விழா தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்சியில் ஆழ்த்தியது.

சன் பிக்சர்ஸ் தயாரித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் சர்கார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழா தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களிலும் ட்ரண்டானது.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா முடிந்தவுடன் ஒட்டுமொத்த விழாவும் எச்.டி பிரிண்டில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியானது. இதுவரை புதிதாக வெளியாகும் படங்களை மட்டும் இணையதளத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ், முதன் முறையாக ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் வெளியிட்டது சர்கார் படக்குழுவையும் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Exit mobile version