தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடிக்கு விலைபோன "சீமராஜா"

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மீண்டும் கூட்டணி அமைத்து நடித்துள்ள படம் சீமராஜா. முதன்முறையாக சிவாகார்த்திகேயனுடன் நடிகை சமந்தா ஜோடி சேர்ந்திருப்பது ஒரு ஸ்பெஷல். விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளியாக போகும் இப்படத்தின் பாடல்கள், வசனங்கள், புரொமோக்கள் அனைத்தும் தொலைக்காட்சி, சமூக வலைத்தளம் மூலம் வலம் வந்து கொண்டிருக்கிறது.

தற்போது என்ன விஷயம் என்றால், இப்படத்தின் தமிழ்நாட்டு விநியோக உரிமை மட்டும் ரூ. 36 கோடிக்கு
விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அப்படி என்றால், தமிழ்நாட்டில் மட்டும் சீமராஜா படம் ரூ. 70 கோடி வசூலித்தால் மட்டுமே சூப்பர் ஹிட்டாகுமாம்.

Exit mobile version