தமிழகத்திலிருந்து ரூ.17.51 கோடி மதிப்பிலான பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் தமிழக அரசு சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 கோடி ரூபாய், 500 மெட்ரிக் டன் அரிசி, 300 டன் பால் பவுடர், கைலிகள், பெட்சீட் அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இதுவரை 306 டன் அரிசி, 270 டன் பால் பவுடர் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்களும் உதவ முன்வந்துள்ளதால் மாவட்ட ஆட்சியர்கள், தொண்டு நிறுவனங்களுடன் 241 லாரிகளில் 17 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சத்திய கோபால் கூறினார். கேரள மக்களுக்கு உதவ சென்னையில் அன்புடன் தமிழகம் என்ற இணையத்தை தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version