தமிழகத்தின் முதல் பசுமை ரயில் நிலையமானது சென்ட்ரல்!

சென்டரல் ரயில் நிலையத்தில் திடக்கழிவு மேலாண்மை முறை பின்பற்றப்படுகிறது. பசுமைக் கழிப்பறை, மின் சிக்கனத்துக்காக எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

தூய்மையான வளாகம், மருத்துவ வசதி, குடிநீர் சுத்திகரிப்பு வசதி, மழைநீர் சேகரிப்பு என சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. இதையடுத்து, சென்ட்ரல் ரயில் நிலையம், பசுமை ரயில் நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய தொழில் கூட்டமைப்பின் பசுமைக் கட்டிடக் கவுன்சில் தலைவர் ராகவேந்திரன், பசுமை ரயில நிலையத்துக்கான சான்றிதழை தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் வழங்கினார்.

Exit mobile version