ட்ரம்ப்-கிம் ஜோங் உன் மீண்டும் சந்திக்கிறார்கள்?

 

ட்ரம்ப்-கிம் ஜோங் உன் சந்திப்பு மீண்டும் நடக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கேல் பாம்போயோ, ஜப்பானில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அங்கிருந்து அவர் வடகொரியா செல்லவுள்ளார். அங்கு அவர், தலைநகர் பியாங்கியோங்கில் அந்த நாட்டு அதிபர் கிம் ஜோங்-உன்னைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார். அதிபர் கிம் ஜோங்-உன்னை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ சந்திக்கவிருப்பது, இது 4-ஆவது முறையாகும்.

இதனிடையே ஜப்பானில் செய்தியாளர்களை சந்தித்த மைக்கேல் பாம்போயோ, ட்ரம்ப்-கிம் ஜோங் உன் சந்திப்பு மீண்டும் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.கொரிய தீபகற்பத்தில் அணு அயுத போர் பதட்டத்தை தவிர்க்கும் விதமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் கிம் ஜோங்-உன்னும் சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்த விவகாரத்தின் தொடர்ச்சியாகத்தான் , அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ வட கொரியா செல்கிறார்.

Exit mobile version