டெஸ்ட் கிரிக்கெட் : 18 வயது இளம் வீரர் ப்ருத்வி ஷா அறிமுகம்!

மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 18-வயதான இளம் வீரர் ப்ருத்வி ஷா அறிமுகம் ஆகிறார்.

மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது. இதில், விளையாடவுள்ள 12 பேர் கொண்ட இந்திய அணியில், 18 வயதான ப்ருத்வி ஷா, இளம் தொடக்க வீரராக இன்று அறிமுகம் ஆகிறார். 

இதனை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. அத்துடன், ப்ருத்வி ஷா வலைப்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையே, அறிமுக வீரர் ப்ருத்வி ஷாவுக்கு பல்வேறு மூத்த வீரர்களும் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

Exit mobile version