டெல்லியே போதுமா? – இல்ல சொந்த ஊருக்கே போயிடலாமா?

சமீபகாலமாக தலைநகர் டெல்லியில் காற்று, அதிக மாசுடன் இருப்பதாக செய்திகள் வெளியானது. காற்று மாசுவை குறைப்பதற்காக அங்கு போக்குவரத்துக்கு கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது.

கார் வைத்திருக்கும் நபர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் காரில் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அது மட்டுமின்றி பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பது, முக கவசம் அணிந்த படி நடமாடுவது என ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனு.

இதையெல்லாம் படித்த பலர் டெல்லியா என்று முகம் சுளித்தனர். நம்ம ஊர் எவ்வளவோ பரவாயில்லப்பா என்று அங்கலாய்த்துக் கொண்டனர்.

டெல்லியில் வசிப்பது ரொம்ப மோசமான அனுபவம் என்று நினைப்பவர்களுக்கு சமீபத்திய ஆய்வு ஒன்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

குளோபல் மெட்ரோ மானிட்டர் என்ற அமைப்பு பெரு நகரங்களில் வாழ்வதற்கு சிறந்த நகரம் எது என்று ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில், டெல்லி 6வது இடத்தை பெற்றுள்ளது. சிறந்த வாய்ப்புகள் மற்றும் வாழ்க்கை தரம் வேண்டி ஏராளமான மக்கள் டெல்லியை நாடி வருகின்றனர் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

அதே நேரத்தில், அதிக காற்று மாசுபாடு மற்றும் அதிக பனிமூட்டம், நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது.

டில்லியின் மக்கள் தொகை தற்போது 1 கோடியே 80 லட்சமாக உள்ளது. ஆனால் 2030க்குள் 4 கோடியாக அதிகரிக்கும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

வாழ்வதற்கு சிறந்த நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் அயர்லாந்தின் டப்ளின் நகரம் உள்ளது. இரண்டாவது இடத்தை அமெரிக்காவில் உள்ள சான் ஜோஸ் நகரம் பிடித்துள்ளது. அதே நேரம் முதல் 10 இடங்களில் 5 சீன நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

 

Exit mobile version