டாஸ்மாக்கிலே 2 லட்ச ரூபாய் கொள்ளை

விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் டாஸ்மாக் சூப்பர்வைசர் மாரியப்பன், விற்பனையாளர் முத்துக் கருப்பன் ஆகியோர் இரவு கடையை பூட்டி விட்டு, 2 லட்சத்து ஐந்தயிரம் ரூபாயுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

குண்டாற்று பாலத்தில் சென்றபோது, இருட்டில் மறைந்திருந்த மர்ம நபர்கள் இருவர் மீதும் மிளகாய் பொடியை தூவியுள்ளனர்.

இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில், பணத்தை பறித்துக்கொண்ட கொள்ளையர்கள், இருவரையும் கட்டையால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச்சென்றனர்.

சம்பவம் குறித்த தகவல் அறிந்த திருச்சுழி காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் காவல்துறையினர் தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Exit mobile version