டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், ரூபாயின் மதிப்பு 16 காசுகள் குறைந்து 71 ரூபாய் 21 காசுகளாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஒருவார காலமாக தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதும் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பங்கு சந்தைகளில் எதிரொலித்து வருகிறது. மும்பை பங்கு சென்செக்ஸ் சந்தை ,332 புள்ளிகள் குறைந்து 38 ஆயிரத்து 312 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்கு சந்தையான நிஃப்டி, 98 புள்ளிகள் குறைந்து 11 ஆயிரத்து 582 புள்ளிகளாக உள்ளது.

Exit mobile version