ஜீ.வி.பிரகாஷ் படத்துக்கு கவுரவம் – டோக்கியோ திரைப்பட விழாவிற்கு தேர்வு

31-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழா வருகிற 25-ம் தேதி தொடங்கவுள்ளது. நவம்பர் மாதம் 3-ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் திரையிட ஜீ.வி.பிரகாஷ் நடித்த சர்வம் தாளமயம் திரைப்படம் தேர்வாகியுள்ளது.

ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சர்வம் தாளமயம் திரைப்படத்தில் ஹீரோவாக ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி, வினீத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மிருதங்க வித்வான் ஒருவரிடம் இருந்து கலையை கற்றுக்கொள்ள விரும்பும் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன், சாதி பிரச்னைகளால் கர்நாடக இசை சமூகத்தில் இருந்து நிராகரிக்கப்படுகிறான். சாதிப் பிரச்னைகளைத் தாண்டி அவனின் இசை ஆசை நிறைவேறியதா என்பது தான் படத்தின் கதை.

Exit mobile version