ஜிஎஸ்டி-க்குள் பெட்ரோல் விலை – இல. கணேசன்

 

பெட்ரோல், டீசலை, ஜி எஸ் டி.க்குள் கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து வருவதாக, பாரதிய ஜனதா மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை பாஜக தொடங்கி விட்டதாக கூறினார். பாஜக – திமுக கூட்டணி வெறும் யூகம் என்று இல. கணேசன் தெரிவித்தார். தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தும் வகையில், அவற்றை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். இதற்கு, பல்வேறு மாநிலங்கள் ஒத்துழைக்கவில்லை என்று குற்றம்சாட்டிய இல.கணேசன், பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றம் குறித்து பேச காங்கிரஸ் கட்சிக்கு அருகதை இல்லை என்று சாடினார். ஜிஎஸ்டி-யில் பெட்ரோல், டீசலை சேர்த்தால், 25 சதவீதம் விலை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

Exit mobile version