செயல்பாட்டுக்கு வந்த கொச்சின் விமான நிலையம்

கேரளாவில் பெய்த கனமழை காரணமாக கொச்சின் விமான நிலையத்திற்குள் நீர் புகுந்தது. இதனால் விமான ஓடு பாதை, விமான நிலையத்தில் உள்ள கடைகள், டாக்ஸிகள் நிறுத்துமிடம் போன்றவையும் பாதிப்புக்குள்ளாகின. இதனால் கேரள அரசிற்கு 220 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 15 நாட்களாக மூடப்பட்டிருந்த கொச்சின் விமான நிலையம் இன்று முதல் திறக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பும் விமானங்களின் நேரப்பட்டியலும் அதன் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Exit mobile version