சென்னை, கோவையில் விரைவில் மின்சார பேருந்துகள் – அமைச்சர் தகவல்!

சென்னை மற்றும் கோவையில் 100 மின்சார பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்ட பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, மிக விரைவில் தமிழகத்தில் பேட்டரி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்றார். முதற்கட்டமாக 100 பேருந்துகள் வாங்குவதற்கு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக அவர் கூறினார்.

அவற்றில் 80 பேருந்துகள் சென்னையிலும், 20 பேருந்துகள் கோவையிலும் இயக்கப்பட உள்ளது என தெரிவித்தார். இன்னும் ஒரு வாரத்தில் 500 புதிய பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்து கழகத்திற்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதனை சமாளிப்பதற்காக முதலமைச்சரிடம் கூடுதல் நிதி ஒதுக்கி தருமாறு கேட்டுள்ளதாகவும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Exit mobile version