சூப்பர் ஹிட் பட்டியலில் 'தமிழ்ப்படம் 2'

சென்னை 28 படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் மிர்ச்சி சிவா. இவரது நடிப்பில் அமுதன் இயக்கத்தில் கடந்த வியாழன் அன்று வெளியான ‘தமிழ்ப்படம் 2’ திரைப்படம் ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், பெரிய கதாநாயகர்கள் படங்களுக்கு இணையான வசூலை பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் கடந்த வாரம் 18 திரையரங்குகளில் 254 காட்சிகள் திரையிடப்பட்டு 4 நாட்களில் ரூ.2 கோடிக்கும் மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட் பட்டியலில் இணைந்துள்ளது. வாரஇறுதி நாட்களையும் தாண்டடி வாரநாட்களிலும் இப்படத்திற்கு கூட்டம் அலைமோதுகிறது.

 

Exit mobile version