சி.வை.தாமோதரம் பிள்ளையின் 187 வது பிறந்ததினம்!

தமிழறிஞர் சி.வை.தாமோதரம் பிள்ளையின் 187 வது பிறந்ததினத்தையொட்டி, யாழ்பானத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இலங்கையின் யாழ்ப்பாணம் சிறுப்பிட்டியைச் சேர்ந்த பண்டைய சங்கத் தமிழ் இலக்கியங்களின் பாதுகாவலரும், பதிப்புத் துறை முன்னோடியுமான சி.வை.தாமோதரம் பிள்ளையின் 187 வது பிறந்த தினம் கடந்த செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, யாழ்பானம் வீரசிங்கம் மண்டபத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு, மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், சாந்தி, சிறிஸ்கந்தராஜா, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Exit mobile version