சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த காக்கிவாடன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இன்று வழக்குப்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் தொழிலாளர்கள் 3 பேர் உடல் கருகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளர்கள் ஒருவர் சிகிச்சைப்பலனின்றி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறை வீரர்கள், தீயை அணைத்தனர்.

Exit mobile version