சிலப்பதிகாரத்தை இலக்கியமாக உருவாக்க வேண்டும் – அமைச்சர் பாண்டியராஜன்

தாம்பரம் அடுத்த மணிமங்கலம் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கண்ணகி கோயில் கட்டப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டி பேசிய அமைச்சர் பாண்டியராஜன், தமிழ் நாகரிகத்தின் முக்கிய அடையாளமான கண்ணகியை போற்றும் சிலப்பதிகாரத்தை, மதம் கடந்து இலக்கியமாக உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 5 கோடி ரூபாய் மதிப்பில் கலச்சார மையம் உருவாக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் பழனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Exit mobile version