சிறப்பு நீதிமன்றம் திறப்பு – ஸ்டாலின் மீதான வழக்கு முதன் முதலில் விசாரணை

எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது.
. உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி ஹூலுவாடி ரமேஷ் இந்த நீதிமன்றத்தை திறந்து வைத்தார். விரைவு நீதிமன்றங்கள் போன்று சிறப்பு நீதிமன்றம் செயல்படும்.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் 12 இடங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலோடு அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு நீதிமன்றம், அதற்கான நீதிபதி பதவியேற்கும் நாளில் இருந்து செயல்பாட்டுக்கு வரும்.

எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கும். இந்தநிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்கு முதல் வழக்காக விசாரிக்கப்பட்டது.

Exit mobile version