சாத்தியமில்லை- ராஜ்நாத் சிங் கைவிரிப்பு

 

ரபேல் ஒப்பந்த விவரங்களை வெளியிடுவது சாத்தியமில்லாதது என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்

பிரான்ஸ் – இந்தியா இடையிலான ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், அனில் அம்பானி ஆதாயம் அடைந்ததாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்சியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.

இந்நிலையில், அரியானா மாநிலம், அம்பாலா மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்று பேசிய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ,ரபேல் போர் விமான விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்துவதாக குற்றம்சாட்டினார்.

மேலும், ரபேல் ஒப்பந்தம் தற்போதைய மோடி ஆட்சியில் புதிதாக ஏற்படுத்தப்பட்டது அல்ல என்றார். முன்னர் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியின் நீட்சியே இந்த ஒப்பந்தம் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், ரபேல் ஒப்பந்தம் பற்றிய ரகசிய விவரங்களை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவது சாத்தியமில்லாதது என்றும் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

Exit mobile version