சவுதி அரேபியாவில் வங்கித் தலைவரான முதல் பெண்!

சவுதி அரேபியாவில் முதன் முறையாக வங்கியின் தலைவராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சவுதி அரேபியாவை நவீன மயமாக்கும் முயற்சியில் இளவரசர் முகமது பின் சல்மான் ஈடுபட்டுள்ளார். இதனால் அநாட்டில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான திட்டங்களை அவர் செயல்படுத்தி வருகிறார்.

இந்தநிலையில், சவுதி அரேபியாவில் இயங்கும் சவுதி பிரிட்டிஷ் மற்றும் அலவ்வால் வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. இதன் தலைவராக பிரபல பெண் தொழிலதிபர் லுப்னா அல் ஒலயன் (lubna al olayan) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஃபோர்ப்ஸ் இதழில் வெளியான 2018 ஆம் ஆண்டுக்கான மத்திய கிழக்கு நாடுகளில் ஆதிக்கம் நிறைந்த பெண்களுக்கான பட்டியலில் முதலிடத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version