சவடால் விட்ட புல்லட் நாகராஜ் – அள்ளிச் சென்ற போலீஸ்!

தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த மேல்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் புல்லட் நாகராஜன். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக புல்லட்டில் சென்று செயின் பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதால் அவருக்கு புல்லட் நாகராஜன் என்ற அடை மொழி  வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அவர் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில்,  சிறைச்சாலையில் உள்ள சக கைதிகளை துன்புறுத்தினால் கொன்று விடுவேன் என கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மதுரை மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஊர்மிளாவுக்கு வாட்ஸ் ஆப்  மூலம் புல்லட் நாகராஜன் கொலை மிரட்டல் விடுத்திருந்தார்.

இதேபோல் தேனி மாவட்ட கலெக்டர், வேறு சில காவலர்கள் உள்ளிட்ட சிலருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதன் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில், உலகில் எங்கு தேடினாலும் சிக்க மாட்டேன் என போலீசுக்கு சவால் விடுத்த புல்லட் நாகராஜனை தேனி பெரிய குளம் டிஎஸ்பி ஆறுமுகம் கைது செய்தார்.

Exit mobile version