சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் – தங்கம் வென்றார் மேரிகோம்

போலந்தில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் போட்டியில், இந்தியாவின் மேரி கோம் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

கிலிவெய்ஸ் நகரில் பெண்களுக்கான 13வது சர்வதேச குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் 48 கிலோ எடைப் பிரிவின் இறுதிச் சுற்றில் இந்தியாவின் மேரிகோம் – கஜகஸ்தானின் அய்ஜெரிம் கசனாயேவாவுடன் மோதினார்.

இதில் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் மேரிகோம் தங்கம் வென்று சாதனை படைத்தார். இந்தாண்டு நடைபெற்ற போட்டிகளில் மேரி கோம் பெறும் மூன்றாவது பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version