சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வா?

 

ஜெர்மனி கால்பந்தாட்ட அணியின் நடுநிலைஆட்டக்காரரும், புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரருமான மெசூட் ஒஸில் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறபோவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இது கால்பந்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ரஷ்யாவில் நடந்த உலக கோப்பை கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனைத்தொடர்ந்து அந்த அணி பல விமர்சனங்களுக்கு ஆளானது. இந்தநிலையில், துருக்கி அதிபர் ரிகேப் தயீப் எர்டோகனுடன் மெசூட், கடந்த மே மாதம் எடுத்துக்கொண்ட புகைப்படம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதனையடுத்து, மெசூட் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜெர்மனி கால்பந்து  அணீயில், தான் அவமதிக்கப்படுவதாகவும், இனவெறி சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் அதிருப்திக்குள்ளாதனாக தெரிவித்துள்ள மெசூட், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இது, ஜெர்மனி மட்டுமல்லாது உலக கால்பந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version