சமந்தா படத்திற்கு என்ன சான்றிதழ் தெரியுமா?

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துவரும் முன்னணி நடிகையான சமந்தா நடித்த இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளது. அதாவது “சீமராஜா” மற்றும் “யூ டர்ன்” ஆகிய 2 படங்களும் வரும் 13ம் தேதி திரைக்கு வரவுள்ளது. “சீமராஜா” பட புரமோஷனில் இருந்தே இந்தபடம் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், தற்போது “யூ டர்ன்” படத்தின் சென்சார் மற்றும் ஒட்டுமொத்த படத்தின் நீளம் உள்ளிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. த்ரில் மற்றும் சஸ்பென்ஸ் படமாக உருவாகியுள்ள “யூ டர்ன்” திரைப்படத்தின் தமிழ் பதிப்பிற்கு தணிக்கை அதிகாரிகள் யூஏ சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த படம் 2 மணி நேரம் 8 நிமிடங்கள் ஒடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமந்தா, ஆதி, பூமிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பவன்குமார் இயக்கியுள்ளார். பூமசந்திர தேஜஸ்வா இசையில் நிகேத் பொமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேஷ் ஆறுமுகம் படத்தொகுப்பில் இப்படம் உருவாகியுள்ளது

Exit mobile version