சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்

 

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாகவும், அமைதியாகவும் நடத்தவது தொடர்பாகவும், அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஒத்துழைப்பை கோருவதற்காக இந்த அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம் கூட்டப்படுகிறது. டெல்லியில், சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நடைபெறும் இந்த அனைத்து கட்சி கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட கட்சித்தலைவர்களை, சுமித்ரா மகாஜன் தனித்தனியாக சந்தித்து பேசவுள்ளார். மேலும், கூட்டத்தொடருக்கு அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும், இந்த ஆலோசனை கூட்டத்தில் சபாநாயகர் சமித்ரா மகாஜன் கேட்டுக்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரை எதிர்கொள்வது தொடர்பாக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்கட்சிகள் நேற்று டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடத்திய குறிப்பிடத்தக்கது.

Exit mobile version