சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு – பந்தளம் அரச குடும்பத்தினர் உண்ணாவிரத போராட்டம்

சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, பந்தளம் அரச குடும்பத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சபரிமலை கோயிலுக்கு பாலின பாகுபாடு இன்றி அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் அண்மையில் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதற்கு பிரபலங்கள் மற்றும் பல அரசில் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.

ஆனால், கேரள மாநில பெண்கள் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பந்தளம் அரச குடும்பத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலக வளாகம் முன்பு இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டுள்ளனர்.

Exit mobile version