சபரிமலை தீர்ப்பு – ஸ்டாலின், கமல், சு.சாமி வரவேற்பு

சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை தலைவர்கள் சிலர் வரவேற்றுள்ளனர்.

ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம் என்பதை தீர்ப்பு நிரூபித்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். சமூக நீதி, பாலின சமத்துவம், பெண் விடுதலைக்கு இந்த தீர்ப்பு மைல்கல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பு நல்ல முடிவு என்று கூறினார்.

சபரிமலையில் நுழைவது குறித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். பாலின சமத்துவத்தை கடைபிடிக்க வேண்டும் என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version