சபரிமலைக்கு பெண்கள் வந்தால் கடுமையான இயற்கை சீற்றங்கள் ஏற்படுமாம்.

 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அகில உலக ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் மிஷன் தலைவர் நித்யோகி ராஜமங்களம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் வயது வித்தியாசம் இன்றி பெண் பக்தர்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பதால் ஏற்படும் இயற்கை சீற்றங்களுக்கு கேரள அரசும் தேவசம் போர்டும் பொறுப்பேற்க வேண்டும் என அகில உலக ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் மிஷன் தலைவர் நித்யோகி ராஜமங்களம் தெரிவித்துள்ளார்.

கடவுளுக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version