சந்திரசேகர ராவின் புதிய திட்டம்

தெலங்கானாவில் முதலமைச்சர் சந்திர சேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஸ்டிரிய சமிதி கட்சி ஆட்சியில் உள்ளது. மாநில சட்டசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு வரை உள்ளது. இந்தநிலையில், புதிய கூட்டணி கட்சிகள் உருவாவதை தடுக்கவும், முன்கூட்டியே தேர்தல் நடத்தி முடிக்கவும் சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கட்சியின் முக்கிய பிரதிநிதிகள், தேர்தல் ஆணையர் உள்ளிட்ட பலரிடம் அவர் ஆலோசனை மேற்கொண்டார். இதனிடையே சட்டசபையை கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்துவற்கான பல்வேறு வியூகங்களை அவர் வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில், தெலங்கானாவில் இன்று நடைபெறவுள்ள டி.ஆர்.எஸ். கட்சியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் இதன் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version