கொரியா பேட்மிண்டன் – சாய்னா நேவால் காலிறுதிக்கு தகுதி

பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில், இந்தியாவின் சாய்னா நேவால் தென்கொரியாவின் கா இன் கிம் உடன் மோதினர்.

37 நிமிடம் நீடித்த இந்த போட்டியில், அபாரமாக ஆடிய சாய்னா 21 க்கு 18, 21 க்கு 18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

காலிறுதியில் ஜப்பானின் ஒகுஹராவை சாய்னா நேவால் எதிர்கொள்கிறார். சர்வதேச பேட்மின்டன் போட்டியில் இவர்கள் இருவரும் 9 முறை மோதியுள்ளனர்.

அதில், சாய்னா 6 முறையும், ஒகுஹரா 3 முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.

Exit mobile version