கேரளாவுக்கு நிதி வழங்கிய சிறுமியை பாராட்டினார் எம்.ஆர். விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் ஜோதிமணி. இவரது 12 வயது மகள் அட்சயாவின், இருதய அறுவை சிகிச்சைக்காக 5 ஆயிரம் ரூபாய் சேர்த்து வைத்திருந்தார். இந்தநிலையில் கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்திற்காக அந்த பணத்தை நிவாரணத் தொகையாக சிறுமி ஜோதிமணி வழங்கினார். இதுதொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியானது. இதனையறிந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சிறுமி அட்சயாவை நேரில் சந்தித்து பாராட்டினார். மேலும், அறுவை சிகிச்சைக்காக 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவியை அமைச்சர் வழங்கினார்.

Exit mobile version