குறைந்த போட்டியில் 2 ஆயிரம் ரன்களை கடந்து பாகிஸ்தானின் பாபர் ஆசம் சாதனை !

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், பாகிஸ்தான், ஹாங்காங் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் பாகிஸ்தானின் முன்னணி பேட்ஸ்மேனான பாபர் ஆசம் 33 ரன்கள் எடுத்தார். அவர் 27 ரன்களை தொடும் போது, ஒரு நாள் போட்டியில், குறைந்த இன்னிங்சில் 2 ஆயிரம் ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

45 போட்டிகளிலேயே அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லா 40 இன்னிங்சில் இரண்டாயிரம் ரன்களை எடுத்து முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Exit mobile version