குடியரசுத் துணைத் தலைவருடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு

திருப்பதியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.

பிரசித்தி பெற்ற ஏழுமலையான் சுவாமியை தரிசனம் செய்ய முதலமைச்சர் பழனிசாமி திருப்பதி சென்றுள்ளார். இந்தநிலையில், திருப்பதிக்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்றிருப்பதை அறிந்த முதலமைச்சர், அவரை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version