கிடு,கிடுவென உயரும் பெட்ரோல், டீசல் விலை

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்ததால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 காசுகள் அதிகரித்துள்ளது. டீசல் விலையும் 20 காசுகள் உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் 82 ரூபாய் 41 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 75 ரூபாய் 39 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version