"காவி "சர்ச்சையில் சிக்கிய ரஜினி!

காலா படத்தில் முழுக்க முழுக்க கருப்பு உடையில் வந்த ரஜினி, பேட்ட படத்தில் முழுவதும் காவி உடையில் தோற்றம் அளிப்பது போன்ற காட்சிகள் இணைய தளத்தில் வைரலாகி உள்ளது. இளம் இயக்குநர் சுப்புராஜ் இயக்கும் பேட்ட படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு டார்ஜிலிங், மும்பை, சென்னை ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் ரஜினி காவி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. காலா படத்தில் முழுவதும் கருப்பு உடை அணிந்து இடதுசாரி கருத்துக்களுக்கு ரஜினி ஆதரவு தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து தற்போது காவி உடையில் வந்துள்ளதால் பாஜகவிற்கு ஆதரவாக கருத்துகள் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா , பாபி சிம்ஹா போன்ற முக்கிய நடிகர்கள் நடிக்க உள்ளனர்.

Exit mobile version