கால்நடைகளின் நலன் கருதி கிராமங்கள் தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் – அமைச்சர் துரைக்கண்ணு

கால்நடைகளின் நலன் கருதி கிராமங்கள் தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுவதாக வேளாண்மை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கால்நடை பாதுகாப்பு திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் பகுதியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு குத்துவிளக்கு ஏற்றி இதை தொடங்கி வைத்தார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் பரசுராமன், அரசு கால்நடை மருத்துவர்கள், அதிகாரிகள், அதிமுக பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த முகாமில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்கல் சிகிச்சை, சுண்டுவாத அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைக்கண்ணு, நடப்பு ஆண்டில் 204 கால்நடை மருத்துவ முகாம்களை நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

Exit mobile version