குற்றாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அருவிகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகையும் வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக அருவிகளில் நீர்வரத்து காணப்பட்டது.
ஆனால், தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி ஆகியவை வறண்டு காணப்படுகின்றன. ஐந்தருவியில் ஆண்கள் நீராடும் பகுதியில் மட்டும் ஓரளவு நீர்வரத்து உள்ளது. இதனால் அங்கு ஆண்கள்,பெண்கள் என ஒரே இடத்தில் நீராடும் நிலை ஏற்பட்டுள்ளது.