கலைஞர்களை பாதுகாக்க கண்காணிப்பு குழு – தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவிப்பு

பாலின வேறுபாடின்றி கலைஞர்களை பாதுகாக்கும் வகையில், கண்காணிப்பு குழு ஒன்றை அமைக்க உள்ளதாக, தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், படப்பிடிப்புத் தளங்களில், பாலின வேறுபாடின்றி கலைஞர்களுக்கு மன அழுத்தமோ, அச்சுறுத்தலோ இன்றி சுயமரியாதையோடு கலையைச் செயல்படுத்தும் சூழலைத் தக்க வைத்துக் கொள்ளவும், பாதுகாக்கவும், தென்னிந்திய நடிகர் சங்கம் தீவிரமாகக் கவனம் மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளது. அதனைச் செயல்படுத்தி கண்காணிக்கக் குழு ஒன்றையும் அமைக்க உள்ளதாகத் தென்னிந்திய நடிகர் சங்கம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

Exit mobile version